Mahanadhi | மகாநதி | 29.08.2025

உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள் – உங்கள் வாழ்க்கை இது. அதனைக் கைகளினால் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!

  • shockகில் உறைந்து போன விஜய். என் வீட்டார் எனக்கெதிராகச் சதியா?
  • இவ்வளவு நடந்தும் பின் வாங்கிய காவேரி. இதுதான் காவேரி.
  • அப்போ உனக்கு இந்த சொத்து, பணம் ஒன்றும் வேண்டாம் என்று காவேரியின் பின்னால் போய் கஷ்டப்படப் போகின்றியா என்று ஆசை காட்டி அரவணைக்கும் நடிப்பில் கல்யாணி பாட்டி.
  • காவேரி இருக்கும் இடம்தான் எனது என்று வீட்டை விட்டு, உறவை விட்டுப் புறப்பட்ட விஜேய்.

எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.

நன்றி.

மகாநதி - Mahanadhi - 29.08.2025

கடைச் சாப்பாடு, வைத்தியசாலை, அசிட் என்ற நொண்டிச் சாட்டுகளுடன், கல்யாணி பாட்டியின் துணையுடன் உள்ளிறங்கினான் அன்பு. அவனின் அடுத்த திட்டம் என்னவென்று புரியவில்லை. கல்யாணிப் பாட்டிக்கு தன் மகள்தான் தேவை தன் பேரன், விஜய் தேவையில்லை என்பதுதான். அமைதியாக இருந்த கல்யாணிக்குத் தலையில் ஆங்காரம் ஏறி தலைவிரித்தாடுகின்றது. இப்போது அவவுக்கு றாதாவும், அன்பும் இருப்பது றொம்ப தெம்பாக இருக்கின்றது.

இதுவும் வாழ்க்கையில் நடந்தேறும் அத்தியாயத்தின் ஒரு பகுதிதான்.

காவேரியை எப்படியெல்லாம் mentally torture பண்ணி, அவவுடைய வாயாலேயே விஜய் வேண்டாம் என்று சொல்ல வைத்து, அதையினையே துருப்புக் காயாக எடுத்துக் கொண்டு, mutual diverseக்கு திட்டம் போட்டு காயை நகர்த்தி இருக்கின்றா, கல்யாணி. கல்யாணி என்னதான் செய்கின்றா என்று கூட அக்கறை இல்லாமல், தாத்தா நீங்க என்ன என்றாலும் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு கை கழுவிப் போனது என்பதும் ஒரு வகையில் விஜேயுக்குச் செய்யும் துரோகம்தானே!

தாத்தாவும் தனக்கென்ன என்று ஒதுங்கிப் போவது என்பது நல்ல விஷயம் இல்லை. விஜய் இதையெல்லாம் கண்டு பிடிப்பான், அதுவும் இவ்வளவு கெதியாக என்று வீட்டில் ஒருதரும் எதிர் பார்க்கவில்லை. இப்படியானவர்களின் மத்தியில், விஜேய் என்னென்று நல்வனாக வளர்ந்தான்? அத்துடன், விஜயின் அம்மா இயற்கையாக இறந்தாவா அல்லது கொலை செய்யப்பட்டாவா என்ற சந்தேகம் இப்போது தோன்றுகின்றது.

காவேரி வீ்ட்டில் என்ன நடக்கின்றதோ என்று சிந்திக்கவே முடியாது. விஜேய் காவேரியின் வீட்டிலிருந்து கோபமாக வெளிக்கிட்டுப் போகையிலே, விஜய் முழு நம்பிக்கையோடுதான் சென்றான். தான் எல்லாவற்றினையும் சரியாக்கிவிட்டு வெகு சீக்கிரமாக வந்து காவேரியினை தன் வீட்டில் வாழுவதற்குக் கூட்டிக் கொண்டு போவேன் என்று.

ஆனால், விஜேயுக்கு கிடைத்ததோ முழு ஏமாற்றம்தான். இங்கு, கல்யாணி பாட்டி, தாத்தா, றாதா சித்தி எல்லாரும் சேர்ந்து ஒன்று கூடி விஜேயுக்கு எதிராக இருக்கின்றார்களே என்பதனை நேராகக் கேட்டறிந்தவுடன் நொருங்கிப் போனான் விஜய். விஜயோ காவேரிதான் வேண்டுமென்று வீ்ட்டினை விட்டுப் புறப்படுகையிலே, அதாவது, விஜேயுக்கு ஒன்றும் கிடைக்காது என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

அப்போ, விஜய் வெறுங்கையுடன்தான் காவேரியின் வீட்டிற்குச் செல்வானா? அவர்களின் வாழ்க்கை பூச்சியத்திலிருந்துதான் ஆரம்பமாகப் போகின்றதா?

உள்ளே இழுக்கப்பட்ட அன்பும், றாதாவும், இப்போ விஜேய் இல்லாதபடியினால் தங்களது ஆட்டத்தினைத் தொடங்க வாய்ப்புகள் உண்டு. இப்போ, கல்யாணி என்ன செய்யப் போகின்றாவாம்? விஜயின் உதவியினைக் கேட்பதற்கு காவேரியின் வீட்டிற்கு போவார்களா? போனாலும் போவார்கள். ஏனென்றால், இவர்களுக்குத்தான் சூடு சொறனை ஒன்றும் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
தாத்தாவுக்கும், பாட்டிக்கும் உதவப் போனால், காவேரி சொத்துக்காத்தான் உதவும்படி, விஜேயை விடுகின்றா என்று திரும்பியும் நாக்கினைத் திருப்பி சொல்ல சாத்தியக் கூறுகள் உண்டு. ஆனால், இதற்குச் சாரதா இடம் கொடுக்க மாட்டா. ஏனென்றால், அந்தளவிற்கு கல்யாணியும், றாதாவும் கேட்ட கேள்விகள் அப்படியானவை.

இனி நடக்கவிருக்கும் வீட்டின் நிஜங்களைப் பார்க்கத்தானே போகின்றோம்.

நீங்கள் எனக்கு மின்னஞ்சலில் உங்கள் கருத்துக்களை சொல்வதற்கு நன்றி. ஒரு வேண்டுகோள், எனது கொமேன்ற் பகுதியில் உங்கள் கருத்துக்களைச் சொன்னால், அனைவருக்கும் நன்மையாக இருக்குலாம் என்று நினைக்கின்றேன். ஆனால், உங்கள் தனிப்பட்ட பிரத்தியேகமான கருத்துக்களை மின்னஞ்சலில் எழுதுங்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் என்பதனையும், உங்கள் கருத்துக்களையும் Description னில் சொல்லுங்கள்.

எமது இந்த சீரியல் review and analysisஇனைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன் – இன்றுதான் நீங்கள் எமது channelலினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Review and Analysis ல் சந்திக்கின்றேன்.

வணக்கம்!